மதுரை, மார்ச் 8: மதுரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.ஐ பாலகிருஷ்ணன் தலைமையில், போலீசார் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும் வகையில் 4 பேர் கையில் பைகளுடன் நின்றிருந்தனர். போலீசார் நெருங்கியதும், 3 பேர் அங்கிருந்து தப்பினர். சிக்கியவரிடம் நடத்திய விசாரணையில், மானாமதுரையை சேர்ந்த தீனதயாளன் மகன் எழிலரசன்(24) என்பது தெரியவந்தது.
இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்த கைப்பையில் இருந்து, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர். விசாரணையில் அங்கிருந்து தப்பிச்சென்றவர்கள், இவருக்கு சிறையில் பழக்கமான ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த முத்துப்பாண்டி, கல்லூரி நண்பரான விருதுநகரை சேர்ந்த தவமுருகன், மதுரை, திருநகரில் வசிக்கும் ஒடிசாவை சேர்ந்த சரத் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
The post கஞ்சா வழக்கில் வாலிபர் கைது appeared first on Dinakaran.
