×

தங்கர்பச்சான் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் “கருமேகங்கள் கலைகின்றன”

தங்கர்பச்சான் இயக்கத்தில் பாரதிராஜா, ‘அருவி’ அதிதி பாலன், கவுதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு நடித்துள்ள படம், ‘கருமேகங்கள் கலைகின்றன’. இப்படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் எழுதிய வைரமுத்து கூறுகையில், ‘ஒரு பாடலுக்கான சிச்சுவேஷனை தங்கர்பச்சான் சொன்னபோது, படத்தில் இப்பாடல் யாருக்காக என்று கேட்டேன். யோகி பாபுவுக்காக என்று அவர் சொன்னார். உடனே நான், ‘யோகி பாபுவின் தலைமுடி கெட்டப்பை மாற்றி நடிக்க வைக்கிறீர்களா? இல்லை, அப்படியே விட்டுவிட்டீர்களா?’ என்று கேட்டேன். ‘அப்படியே விட்டுவிட்டோம்.

ஒரிஜினல் தலைமுடியுடன்தான் யோகி பாபு நடிக்கிறார்’ என்று தங்கர்பச்சான் சொன்னவுடன், யோகி பாபுவின் தலைமுடி பற்றியும் என் பாடல் வரிகளுக்குள் வரும் விதமாக ஒரு பாடல் எழுதியுள்ளேன். இதற்கு முன்பு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் குமார் ஆகியோருக்கு பாடல்கள் எழுதியுள்ளேன். அப்போதெல்லாம் அவர்களின் முகத்தைப் பார்த்துவிட்டு பாடல் எழுதிய நான், முதல்முறையாக யோகி பாபுவுக்காக அவரது முடியைப் பார்த்து பாடல் எழுதியுள்ளேன்’ என்றார்.

The post தங்கர்பச்சான் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் “கருமேகங்கள் கலைகின்றன” appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Thangarbachan ,Yogi Babu ,Thangar Bachchan ,Bharathiraja ,Aruvi ,Aditi Balan ,Gautham Vasudev Menon ,Vairamuthu ,GV Prakash ,Kumar ,Kollywood Images ,
× RELATED தேர்தல் பிரசாரத்தின்போது...