×

எதிராக செயல்படுவோர் மீது அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கும் பாஜவுக்கு ஜனநாயகம் குறித்து பேச அருகதையோ, தகுதியோ கிடையாது: துரை வைகோ பதிலடி

சென்னை: சென்னை, எழும்பூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: கையெழுத்து இயக்கத்தைப் பொருத்தவரை யார் வேண்டுமானாலும் நடத்தலாம். அதற்கு வரவேற்பு இருக்கிறதா? என்று தான் பார்க்க வேண்டும். கையெழுத்து வாங்கக் கூடிய ஜனநாயக உரிமையில்லையா? என்கிறார் முன்னாள் ஆளுநர் தமிழிசை, தங்களுக்கு எதிராக செயல்படுவோர் மீது அமலாக்கத்துறை உள்ளிட்டவற்றின் மூலம் நடவடிக்கை எடுக்கும் பாஜகவுக்கு, ஜனநாயகம் குறித்து பேச அருகதையோ, தகுதியோ கிடையாது. ஜாதி, மதம் வைத்து அரசியல் செய்வோரை தீவிரவாதிகளை விட மோசமானவர்களாகவே கருத வேண்டும். இத்தகைய அரசியல் சக்திகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். மதவாத சக்திகளை வளரவிடக் கூடாது என்பதில் தவெக தலைவர் விஜய் தெளிவாக இருக்க வேண்டும். இவ்வாறு துரை வைகோ கூறினார்.

The post எதிராக செயல்படுவோர் மீது அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கும் பாஜவுக்கு ஜனநாயகம் குறித்து பேச அருகதையோ, தகுதியோ கிடையாது: துரை வைகோ பதிலடி appeared first on Dinakaran.

Tags : Baja ,Durai Vigo ,Vaykhla ,Chennai ,Duri Wiko ,Ulampur, Chennai ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…