×

பாஜ முன்னாள் எம்எல்ஏவை சுட்டு கொல்ல முயற்சி உதவியாளர் கைது

தன்பாத்: முன்னாள் எம்எல்ஏவும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் மைத்துனியுமான சீதா சோரன் கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்னர் ஜேஎம்எம் கட்சியில் இருந்து விலகி பாஜவில் சேர்ந்தார். சீதா சோரன் நேற்று முன்தினம் தன்பாத்தின் சராய்தேலா பகுதியில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். அப்போது அவருடைய உதவியாளர் தேவ் அஷிஷ் மனோரஞ்சன் கோஷ் சீதா சோரனை நோக்கி துப்பாக்கியை எடுத்து சுட்டு கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். இதை பார்த்த பாதுகாவலர் பாய்ந்து சென்று கோஷை பிடித்துள்ளார். இதையடுத்து மனோரஞ்சன் கோஷ் கைது செய்யப்பட்டார்.

The post பாஜ முன்னாள் எம்எல்ஏவை சுட்டு கொல்ல முயற்சி உதவியாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Aide ,BJP ,MLA ,Dhanbad ,Jharkhand ,Chief Minister ,Hemant Soren ,Sita Soren ,JMM ,Lok Sabha elections ,Saraidela ,BJP MLA ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...