×

தங்க கடத்தல் வழக்கு நடிகை ரன்யா ராவிடம் 3 நாள் விசாரிக்க அனுமதி: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: தங்க கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவிடம் 3 நாட்கள் விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துபாயில் இருந்து பெங்களூருக்கு தங்கம் கடத்தி வந்ததாக நடிகை ரன்யா ராவை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விமான நிலையத்தில் கைது செய்தனர். இதையடுத்து அவரது வீட்டில் நடந்த சோதனையில் மொத்தம் ரூ.17.29 கோடி மதிப்பு ரொக்கம், தங்கம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரன்யா ராவை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் ஜாமீன் கோரி ரன்யா ராவ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இதையடுத்து வருவாய் புலனாய்வு துறை சார்பில் பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் நடிகை ரன்யா ராவ் கடந்த 6 மாதத்தில் 27 முறை துபாய் சென்று வந்துள்ளார். அங்கே ரியல் எஸ்டேட்டில் ப்ரிலேன்சராக பணிபுரிவதாக கூறியுள்ளார். அவரிடம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எனவே அது குறித்து விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கோரினர். இதை ஏற்ற சிறப்பு நீதிமன்றம் ரன்யா ராவை 3 நாட்கள் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நேற்று அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

The post தங்க கடத்தல் வழக்கு நடிகை ரன்யா ராவிடம் 3 நாள் விசாரிக்க அனுமதி: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Ranya Rao ,Bengaluru ,Revenue Intelligence ,Dubai ,Bangalore.… ,Dinakaran ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக...