சென்னை: மும்மொழி கல்விக் கொள்கைக்கு ஆதரவாக நேற்று முன்தினம் காரப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி வாயிலில் பாஜ சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பள்ளி முடிந்து வெளியே வந்த மாணவர்களுக்கு மும்மொழி கல்விக் கொள்கை குறித்து கூறிய பாஜவினர் மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து போடும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக புகார் எழுந்தன. புகாரின் அடிப்படையில் கண்ணகிநகர் போலீசார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த பாஜ கவுன்சிலரும் பாஜ மாநில ஆன்மீகப் பிரிவு துணை தலைவர்லியோ சுந்தரம்,மாவட்ட செயலாளர் எஸ்.ஜி.சூர்யா மற்றும் பாஜவை சேர்ந்த மோகன்குமார் (45), கோடீஸ்வரன் (45), அன்பரசன் (44) ஆகிய 5 பேர் மீது 126 (2), 192 உள்ளிட்ட 4 வழக்கு பதிவு செய்து கண்ணகி நகர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாஜவினரை விரட்டிய மக்கள்: நேற்று மாலை ஆலந்தூர் பாஜ நிர்வாகிகள் சிவகுமார் பரந்தாமன், இன்பராஜ் மற்றும் பாஜவினர் கொடிகளை கையில் ஏந்தியபடி ஆலந்தூர் எம்.கே.என் சாலையில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தினர். இத்ததகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் வடக்கு இளைஞர் அணி மாவட்ட திமுக செயலாளர் கோல்ட் பிரகாஷ் தலைமையில் திமுக நிர்வாகிகள் கலாநிதி குணாளன், கார்த்திக், சண்முகம் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பாஜவினர் செல்லும் இடங்களில் திமுக கொடியுடன் சென்று தமிழ் வாழ்க,; இந்தி ஒழிக, மும்மொழி கொள்கை வேண்டாம் இரு மொழி கொள்கை வேணடும் என குரலை எழுப்பி பாஜவினை விரட்ட முயன்றனர் இதனால் இருதரப்பிருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் பரங்கிமலை காவல் நிலைய ஆய்வாளர் பாலன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு இரு தரப்பினரிடமும் சமாதானம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post மும்மொழி கல்விக்கொள்கைக்கு ஆதரவாக மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாக புகார்: பாஜ கவுன்சிலர் உள்ளிட்ட 5 பேர் கைது appeared first on Dinakaran.
