×

புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக வடமாநில நபர்களை தேடிப்பிடித்து கையெழுத்து வாங்கிய பாஜவினர்


பெரம்பூர்: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு அரசியல் கட்சிகள் மற்றும் மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்கு எதிர்வினையாக பாஜ சார்பில் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக ‘சம கல்வி எங்கள் உரிமை’ என்ற கையெழுத்து இயக்கத்தை சென்னை அமைந்தகரையில் தமிழிசை சவுந்தர்ராஜன் நேற்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பாஜவினர் துண்டு பிரசுரங்களை விநியோகித்து பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கினர்.

அதன் ஒரு பகுதியாக பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் வடசென்னை மேற்கு மாவட்ட பாஜ சார்பில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பாஜ மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் பங்கேற்று, வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் நகைக்கடை, மருதாணி கடை உள்ளிட்ட 4 கடைகளுக்கு சென்று, ஏற்கனவே பேசி வைத்தபடி கையெழுத்தை வாங்கிவிட்டு, காரில் ஏறி புறப்பட்டார். பொதுமக்கள் யாரும் இவர்களை கண்டுகொள்ளவில்லை. பேப்பர் மில்ஸ் சாலை என்பது எப்போதும் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதி. வரிசையாக கடைகள் இருக்கும்.

ஆனால் ஒரு கடையில் கையெழுத்து வாங்கிவிட்டு அதன் பிறகு 4 கடைகள் தள்ளி மற்றொரு கடைக்கு சென்று அங்கு கையெழுத்து வாங்கினர். தங்களுக்கு தெரிந்த நபர்கள் மற்றும் வட மாநில நபர்களிடம் மட்டுமே கையெழுத்தை வாங்கி விட்டு அவசர அவசரமாக பாஜவினர் அங்கிருந்து புறப்பட்டனர்.

The post புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக வடமாநில நபர்களை தேடிப்பிடித்து கையெழுத்து வாங்கிய பாஜவினர் appeared first on Dinakaran.

Tags : BJP ,northern states ,Perambur ,Union government ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை...