- ஒசாகா
- இந்தியன்வெல்ஸ் திறக்கப்பட்டுள்ளது
- ஒசாரியோ
- அஸரெங்கா
- இந்தியன் வெல்ஸ்
- பிஎன்பி பாரிபா ஓபன்
- இந்திய வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்
- விக்டோரியா அசாரென்கா
- தின மலர்
இண்டியன்வெல்ஸ்: இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியான பிஎன்பி பாரிபா ஓபனில் நேற்று முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன. பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா (35 வயது, 35வது ரேங்க்), அமெரிக்க வீராங்கனை கிளர்வி நொனெவ் (18 வயது, 193வது ரேங்க்) ஆகியோர் மோதினர். ஒரு மணி 42 நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தை அசரென்கா 6-4, 7-6(9-7) என்ற புள்ளிக் கணக்கில் போராடி வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் செக் குடியரசு வீராங்கனை கேத்ரினா சினியகோவா (28 வயது, 59வது ரேங்க்) 6-2, 6-1 என நேர் செட்களில் அர்ஜென்டீனா வீராங்கனை மரியா லூர்துசை (25 வயது, 103வது ரேங்க்) வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்தார். அதேபோல், கொலம்பியாவின் கமிலா ஒசாரியோ (23 வயது, 53வது ரேங்க்), முன்னாள் இண்டியன் வெல்ஸ் சாம்பியன் ஜப்பானின் நவோமி ஒசாகோ (27 வயது, 56வது ரேங்க்) ஆகியோர் மோதினர்.
இருவரும் சமபலத்தை வெளிப்படுத்தினாலும் கூடுதல் வேகம் காட்டிய ஒசாரியோ ஒரு மணி 31 நிமிடங்கள் விளையாடி 6-4, 6-4 என நேர் செட்களில் ஒசாகாவை சாய்த்தார். ஒசாகா 2018ம் ஆண்டு இண்டியன் வெல்ஸ் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post இண்டியன் வெல்ஸ் ஓபன் முன்னாள் சாம்பியன் ஒசாகா வெளியேற்றம்: அடுத்த சுற்றில் ஒசாரியோ, அசரென்கா appeared first on Dinakaran.
