புதுடெல்லி: காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் வெளியிட்ட வருடாந்திர இந்தியா பிரிவு ஆலோசனை அறிக்கையில் , இந்தியாவில் தனியார் முதலீட்டு வளர்ச்சி மந்தமாக இருப்பதை இந்த அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தனியார் நிறுவன முதலீடு குறிப்பாக வரலாற்று சராசரிகளுடன் ஒப்பிடும்போது மந்தமாக உள்ளது. தனியார் நிறுவனங்களின் முதலீட்டு வளர்ச்சி 2022-23 ல் 21 சதவீதத்திலிருந்து 2023-24 ல் 13 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இதனால் நிலைமை மோசமடைந்துள்ளது. குறிப்பாக, உற்பத்தி திறனை விரிவுபடுத்துவதற்கு முக்கியமான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களில் முதலீடு, தொடர்ந்து குறைந்து வருகிறது.சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு அதன் எதிர்பார்ப்புகளை விட குறைவாகவே செயல்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது. உலகளாவிய அந்நிய நேரடி முதலீட்டில் இந்தியாவின் பங்கு 2020 இல் சுமார் ஆறரை சதவீதத்திலிருந்து 2023 இல் சுமார் 2 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றார்.
The post இந்தியாவில் தனியார் முதலீட்டு மந்தம்: ஜெய்ராம் ரமேஷ் தகவல் appeared first on Dinakaran.
