- முத்தம்மாள் விடுதி
- ஒரத்தநாடு
- தொல்பொருள் துறை
- தஞ்சாவூர்
- சோழ
- மராத்தா சரபோஜி
- ராஜா
- சரபோஜி II.
- முத்தம்மாள்
- சத்திரம்

தஞ்சை சோழர்களின் ஆட்சிக் காலத்தில் பேரும் புகழும் பெற்ற பெரு நகரமாய் இருந்தது. அதற்கு சற்றும் குறையாத புகழோடு ஆட்சி நடத்தயவர்கள் தான் மராட்டிய சரபோஜி மன்னர்கள். அவர்களுள் மக்களிடையே அதிக செல்வாக்கு பெற்றவர் தான் இரண்டாம் சரபோஜி மன்னர். இவரது இயற்பெயர் ராஜாராம் என்பதாகும். இவர் பன்மொழி புலமை பெற்றிருந்தார். அதனால் தான் தமிழின் அரும்பெரும் இலக்கிய நூல்களை தொகுத்து சரஸ்வதி மஹால் நூலகத்தை விரிவு படுத்தனார். அதனால் தான் சரஸ்வதிமஹால் ஆசியாவிலேயே மிக முக்கியமான நூலககங்களுள் ஒன்றாக போற்றப்படுகிறது. இப்படி கலையார்வம் மிக்கவர் காதல் வயப்படுது இயல்பு தானே. அப்படித் தான் தஞ்சாவூர் அரண்மனையில் உயர் பதவியில் இருந்தவரின் சகோதரியான முத்தம்மாள் மீது காதல் வயப்பட்டார் இரண்டாம் சரேபோஜி மன்னர்.
பேரழகியான முத்தம்மாள் கர்ப்பமாக இருந்தபோது நோய்வாய்பட்டு உயிரிழந்தார். இறக்கும் தருவாயில் சரபோஜி மன்னரிடம் முத்தம்மாள் ஒரு வேண்டுகோள் வைத்தார். அதாவது தன்னைப் போல் கருவுற்றிருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு உயரிய மருத்துவம் அளித்து அவர்கள் உயிர் போவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும ்என்பது தான் அந்த வேண்டுகோள். அப்படி முத்தம்மாளின் இறுதிவிருப்பத்தை நிறைவேற்றும் விதமாக கட்டப்பட்டது தான் ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம். கி.பி.1800 ஆம் ஆண்டுகளில் ஒரத்தநாட்டில் 5 ஏக்கர் பரப்பளவில் இந்த சத்திரம் கட்டப்பட்டது. மராட்டிய கட்டிடக் கலையில் ‘ப’ வடிவில் யானை முகத்துடன் கூடிய அழகிய தோரண வாயிலுடன் கட்டப்பட்டுள்ளது. குதிரை பூட்டிய தேருடன் அமைந்த வாயில் பகுதியும் உள்ளது. வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள் கொண்ட முற்றங்கள் இந்த சத்திரத்தின் சிறப்பு.
இங்கு ஒரே சமயத்தில் 5,000 பேர் வரை தங்கி ஓய்வெடுக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மருத்தும் செய்வதற்கான அறைகள், விருந்தினர்களுக்கான அறைகள் பணியாளர்கள் தங்குவதற்கான அறைகள், நிர்வாகிகள், காவலாளிகள், தூய்மை பணியாளர்கள் இவர்கள் அனைவருக்கும ்தனினத்தனியாக தங்குமிடங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்த சத்திரத்தை நிர்வகிப்பதற்காக ஆகும் செலவினங்களை எதிர்கொள்ள ஒரத்தநாட்டை சுற்றி சில கிராமங்கள் தானமாக வழங்கப்பட்டன. அதில் இருந்து கிடைக்கும் வருவாயை கொண்டு இந்த சத்திரம் பராமரிக்கப்பட்டது. 200 ஆண்டுகள் கடந்த பிறகு தற்போது இந்த சத்திரம் சிதிலமடைந்துள்ளது. அதை சீரமைத்து புணரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது தமிழ்நாடு தொல்லியில் துறை. சுமார் 30.79 கோடியில்இந்த புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த செப்டம்பர் மாதம் டெண்டர் கோரப்பட்டு தற்போது பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. புணரமைப்பு பணிகள் அடுத்த ஆண்டு(2026)-க்குள் முடிவடையும் என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. அதற்குப் பிறகு புதுப்பொலிவுடன் புணரமைக்கப்பட்ட முத்தம்மாள் சத்திரத்தை பொதுமக்கள் பார்வையிடலாம்.
மனிதனர்கள் குணங்களால் எத்தனை வகைப்பட்டிருந்தாலும், காதல் வயப்படும் போது அனைவருக்கும் ஒரே நிலைதான். ஆண்டி முதல் அரசன் வரை காதலால் கசிந்துருகிய எத்தனையோ பேரை நாம் பார்த்திருக்கிறோம். காதலுக்காகவும் காதலிக்காவும் காலத்தால் அழிக்க முடியாத தாஜ்மஹாலை கட்டி வரலாற்றில் இடம்பிடித்த ஷாஜஹான் தொடங்கி தான் காதலிலத்த பெண்ணை கடைசி வரை கண்கலங்காமல் பாதுகாக்கும் சாமானியன் வரை எல்லோருமே சரித்திர நாயகர்கள் தான். அப்படி தன் காதலிக்காக சத்திரம் கட்டிய ஒரு அரசனைப் பற்றிய அறிமுகம் தான் இது.
மராட்டிய கட்டிடக் கலையில் ‘ப’ வடிவல் யானை முகத்துடன் கூடிய அழகிய தோரண வாயிலுடன் கட்டப்பட்டுள்ளது. குதிரை பூட்டிய தேருடன் அமைந்த வாயில் பகுதியும் உள்ளது. வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள் கொண்ட முற்றங்கள் இந்த சத்திரத்தின் சிறப்பு.
The post சத்திரம் பேசும் சரித்திரம்.. ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம்: ரூ.31 கோடியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளும் தொல்லியல் துறை appeared first on Dinakaran.
