- பாஜக
- நிதீஷ் குமார்
- முதல் அமைச்சர்
- பீகார்
- பிரசாந்த் கிஷோர் ஆருடம்
- பெட்டியா
- பிரசாந்த் கிஷோர்
- சட்டசபை
- மேற்கு சம்பாரண் மாவட்டம்
- ஜான் சுராஜ் கட்சி...
பெட்டியா: பீகார் பேரவை தேர்தலில் பாஜ கூட்டணியில் நிதிஷ் குமார் போட்டியிட்டாலும் அவரால் மீண்டும் முதல்வராக முடியாது என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். மேற்கு சம்பராண் மாவட்டத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சி நிறுவனருமான பிரசாந்த் கிஷோர், “பீகாரில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ் குமார் பாஜவுடன் கூட்டணி வைத்து மீண்டும் போட்டியிடுவார். நிதிஷ் குமாரின் செல்வாக்கு குறைந்து வருவதால், அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாஜ தயக்கம் காட்டும்.
பேரவை தேர்தலுக்கு பின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் முழு ஐந்தாண்டு காலத்துக்கும் நிதிஷ் குமார் முதல்வராக இருப்பார் என பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அறிவிக்க வேண்டும் என நான் சவால் விடுகிறேன். அப்படி அவர்கள் அறிவித்தால் பாஜவின் வெற்றி வாய்ப்பு குறையும். அதனால் பீகார் முதல்வராக நிதிஷ் குமார் பதவி ஏற்க முடியாது. நான் இதை எழுத்துப்பூர்வமாக எழுதி தருகிறேன். நான் சொல்வது நடக்கவில்லையெனில் என் சொந்த கட்சி பிரசாரத்தை கைவிடுகிறேன்” என்றார்.
The post பாஜ கூட்டணியில் போட்டியிட்டாலும் நிதிஷ் குமார் மீண்டும் பீகார் முதல்வராக முடியாது: பிரசாந்த் கிஷோர் ஆரூடம் appeared first on Dinakaran.
