- எச்சில் துப்புதல் சம்பவம்
- உ.பி. சட்டசபை
- லக்னோ
- உத்தரப் பிரதேச சட்டமன்றம்
- சபாநாயகர்
- சதீஷ் மஹானா
- சட்டமன்ற உறுப்பினர்
- துப்புதல்
- தின மலர்
லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவை வளாகத்தில் குட்கா மற்றும் பான் மசாலாவுக்கு தடை விதித்து சட்டப்பேரவைத் தலைவர் சதீஷ் மஹானா அறிவித்தார். உபி சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று முன்தினம் காலையில் ஒரு எம்எல்ஏ பான் மசாலா எச்சிலை துப்பிச்சென்றார். அனைத்து எம்எல்ஏக்களும் வந்து செல்லும், அந்த இடத்தில் பான் மசாலா சாப்பிட்ட எச்சில் துப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவானது. இதுகுறித்து சபாநாயகர் சதீஷ் மஹானா தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
நேற்று கேள்வி நேரம் முடிந்ததும்,’ உடனடியாக அமலுக்கு வரும் வகையில், சட்டப்பேரவை வளாகத்திற்குள் பான் மசாலா மற்றும் குட்கா பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை வளாகத்திற்குள் குட்கா அல்லது பான் மசாலா உட்கொண்டால் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும். விதிகளின்படி தேவையான நடவடிக்கையும் எடுக்கப்படும்’ என்றார்.
The post எச்சில் துப்பிய விவகாரம்; உ.பி சட்டப்பேரவையில் குட்கா, பான் மசாலாவுக்கு தடை: மீறினால் ரூ.1,000 அபராதம் appeared first on Dinakaran.
