சேலம்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே மந்தைவெளியைச் சேர்ந்தவர் குணசேகரன்(39). நரசிங்கபுரம் நகராட்சி பில் கலெக்டர். சில நாட்களுக்கு முன்பு விநாயகபுரத்தை சேர்ந்த ராமசாமி என்பவர் தனது வீட்டிற்கு பெயர் மாற்றம், சொத்து வரி மாற்றத்திற்காக குணசேகரனை அனுகியுள்ளார். அப்போது, அவர் சொத்து வரியை குறைத்து மதிப்பிட்டு தர ரூ.40,000 லஞ்சம் கேட்டு முதல்கட்டமாக ரூ.25,000 கேட்டுள்ளார். லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் அறிவுரைப்படி நேற்று மதியம் ஒரு மணியளவில் குணசேகரனை விநாயகபுரம் சந்தை பகுதிக்கு ராமசாமி அழைத்து ராமசாமி பணத்தை கொடுத்துள்ளார். அங்கு மறைந்திருந்த சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், குணசேகரனை கைது செய்தனர்.
The post ரூ.25,000 லஞ்சம் பில் கலெக்டர் கைது appeared first on Dinakaran.
