×

வார இறுதி நாட்களை முன்னிட்டு 677 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துக் கழகம்

சென்னை: வார இறுதி நாட்களை முன்னிட்டு 677 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக

* 07/03/2025 (வெள்ளிக்கிழமை ), 08/03/2025 (சனிக்கிழமை ), 09/03/2025 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து

*திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 07, 08 தேதிகளில் 535 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து

*திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 07, 08 தேதிகளில் 102 பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னை மாதாவரத்திலிருந்து

* 07, 08 ஆகிய தேதிகளில் 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

The post வார இறுதி நாட்களை முன்னிட்டு 677 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துக் கழகம் appeared first on Dinakaran.

Tags : Transport Corporation ,Chennai ,Government Rapid Transport Corporation ,Government Transport Corporation of Tamil Nade ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும்...