ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் 73 ரன்கள் குவித்த ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்
அதே நேரத்தில் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸி., அணி அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறியுள்ள நிலையில் ஸ்டீவ் ஸ்மித் இந்த முடிவை அறிவித்துள்ளார்.
ஒரு நாள் போட்டியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு 170 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12 சதங்களுடன் 5,800 ரன்கள் குவித்துள்ளார் ஸ்மித். 2015, 2023 ஒருநாள் உலகக் கோப்பைகளை வென்ற ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் அங்கம் வகித்திருந்தார்
போட்டிக்குப் பிறகு ஸ்மித் தனது சக வீரர்களிடம் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாகக் கூறியுள்ளார். கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஸ்மித் தொடர்ந்து டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவார்.
The post ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்தார் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் appeared first on Dinakaran.
