×

பெரம்பலூரில் அறிவியல் கருத்தரங்கில் அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு

 

பெரம்பலூர், மார்ச் 5: பெரம்பலூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஒரு நாள் அறிவியல் கருத்தரங்கில் நடந்த போட்டியில் வேப்பந்தட்டை அரசுக் கல்லூரி மாணவர்கள் 3ம் இடம். முதல்வர் சேகர் பாராட்டினார். பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் கீழ் உள்ள சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, மாநில அளவிலான ஒரு நாள் அறிவியல் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கில் மாநில அளவிலுள்ள 12 கல்லூரிகளைச் சேர்ந்த பல்வேறு உயிர் அறிவியல் துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கருத்தரங்கில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உயிர் தொழில்நுட்பவியல் துறையைச் சார்ந்த மாணவர்களும் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் நடைபெற்ற சுவரொட்டி விளக்கக் காட்சி போட்டியில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் விஜயகுமார், தனுஷ், சசிகலா ஆகியோர், பேராசிரியர் சுரேஷ் ஆகியோர் உயிர்த்தொழில் நுட்பவியல் பயன்பாட்டின் மூலம் தண்ணீர் மாசு நீக்குவதற்கான வழிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனும் தலைப்பில் விளக்கிய சுவரொட்டிக்கு மூன்றாம் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் 110 அறிவியல் மாணவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 3ஆம் பரிசினைப்பெற்ற வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களை கல்லூரி முதல்வர் (பொ) சேகர்,துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் பாராட்டினர்.

The post பெரம்பலூரில் அறிவியல் கருத்தரங்கில் அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Veppanthattai Government College ,Chief Minister ,Shekhar ,Perambalur Thanalakshmi Srinivasan Educational Group ,
× RELATED வேந்தர் சீனிவாசன் வழங்கினார்...