×

கூலித்தொழிலாளியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை

 

மதுரை, மார்ச் 5: மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள பாண்டியன்நகர் பகுதியை சேர்ந்தவர் பிச்சைப்பாண்டி(40). கூலித்தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் முத்துகுமார்(33) என்பவருக்குமிடையே முன்விரோதம் இருந்துவந்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு பிச்சைபாண்டி முத்துக்குமார் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றியதால் ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர். அப்போது மதுபோதையில் இருந்த முத்துகுமார் கத்தியை எடுத்து பிச்சைபாண்டியை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடினார். கொலை செய்துவிட்டு தப்பியோடிய முத்துக்குமாரை மதுரை அண்ணாநகர் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் டி.ராஜேந்திரன் ஆஜரானார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜோசப்ஜாய் நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம் நிருபிக்கப்பட்டதால் முத்துக்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post கூலித்தொழிலாளியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Pichaipandi ,Pandiyannagar ,Bandikovil ,Muthukumar ,
× RELATED ராயபுரம் மண்டலத்தில் ரூ.1.26 கோடி...