×

ஹெலிகாப்டர் பேர ஊழல் இத்தாலி இடைத்தரகருக்கு ஈடி வழக்கிலும் ஜாமீன்

புதுடெல்லி: இத்தாலிய தயாரிப்பு நிறுவனமான அகஸ்டாவெஸ்ட்லேண்டிடம் இருந்து 12 விவிஐபி ஹெலிகாப்டர்களை ரூ.3600 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இந்த வழக்கில் இத்தாலி இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் ரூ.225 கோடி பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த புகார்கள் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

2018 டிசம்பரில் துபாயில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ், இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிபிஐ தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பிப்.18ல் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அமலாக்கத்துறை வழக்கிலும் ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்வரனா காந்த சர்மா சுமார் 6 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்சுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

The post ஹெலிகாப்டர் பேர ஊழல் இத்தாலி இடைத்தரகருக்கு ஈடி வழக்கிலும் ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : ED ,New Delhi ,AgustaWestland ,Christian Michael James ,Dinakaran ,
× RELATED இந்தியா, ஓமன் இடையே ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்து!!