ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் சென்னையின் எப்சி-நார்த்ஈஸ்ட் யுனைடட் எப்சி அணிகள் மோதின. சென்னையில் நடந்த இந்த ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்ற நார்த்ஈஸ்ட் 5வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
எஞ்சிய ஒரு இடத்துக்கான போட்டியில் மும்பை சிட்டி எப்சி, ஒடிஷா எப்சி அணிகள் உள்ளன. ஏற்கனவே மோகன் பகான் எஸ்ஜி, எப்சி கோவா, பெங்களூர் எப்சி, ஜாம்ஷெட்பூர் எப்சி அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிப் பெற்று விட்டன. சென்னை உட்பட எஞ்சிய 6 அணிகளும் லீக் சுற்றுடன் வெளியேறுகின்றன.
The post பிளே ஆப் சுற்றில் நார்த்ஈஸ்ட் appeared first on Dinakaran.
