×

கள்ளச்சாராயம் விற்றவர் கைது

தர்மபுரி, மார்ச் 5: தர்மபுரி மாவட்டம் அரூர் போலீஸ் எஸ்ஐ சக்திவேல் தலைமையிலான போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெத்தூர் விவசாய நிலத்தில் ஒருவர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து சோதனை செய்தபோது, கையில் வைத்திருந்த கேனில் 2 லிட்டர் கள்ளச்சாராயம் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அதே பகுதியை சேர்ந்த செல்லப்பன் (63) என்பவரை கைது செய்து, கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

The post கள்ளச்சாராயம் விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Aroor Police ,SI Sakthivel ,Pettur ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை