×

ஐடிஐ மாணவி மாயம்

சேலம், மார்ச் 5: சேலம் முகமது புறா 2வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (45). இவர் அப்பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவரது மகள் தனலட்சுமி (20), அரசு ஐடிஐயில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 1ம் தேதி, பேக்கரியில் இருந்து வௌியே சென்ற தனலட்சுமி, மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்த போதும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில், தனலட்சுமியின் தாய் சரிதா, கிச்சிப்பாளையம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post ஐடிஐ மாணவி மாயம் appeared first on Dinakaran.

Tags : ITI ,Mayam ,Salem ,Shankar ,Salem Mohammed Pura 2nd Cross ,Dhanalakshmi ,Government ,Dinakaran ,
× RELATED மாவட்டத்தில் 85% பேருக்கு விநியோகம்