×

இலவச பட்டா வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் மனு கொடுக்கும் போராட்டம்

கோவில்பட்டி, மார்ச் 5: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோவில்பட்டி தாலுகா குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. சிபிஐ கிளைச்செயலாளர்கள் மாரியப்பன், ரஞ்சிதம் ஆகியோர் தலைமை வகித்தனர். தாலுகா செயலாளர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்று மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: கோவில்பட்டி வட்டம் தாமஸ் நகர், மறவர் காலனி பகுதிகளில் ஏழை, எளிய மக்கள் 50 வருடங்களாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். வீடுகளுக்கு தீர்வை ரசீது, மின் இணைப்பு, ரோடு வசதி, வாறுகால் வசதி போன்றவை இலுப்பையூரணி பஞ்சாயத்து மூலம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. எனவே மேற்படி வீடுகளுக்கு இலவச பட்டா வழங்கக்கோரி பல்வேறு கட்ட போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத அரசு அதிகாரிகளை கண்டித்து மனுக்கொடுக்கும் போராட்டம் நடத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

The post இலவச பட்டா வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் மனு கொடுக்கும் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Indian Communist Party ,Kovilpatti ,Kovilpatti Taluka Committee of the Communist Party of India ,CPI ,Mariappan ,Ranjitham ,Taluka ,Babu ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை