×

ரூ.31 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம்

 

காங்கயம், மார்ச் 4: காங்கயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரை ஏலம் நடைபெற்றது. அதில் காங்கயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 5 விவசாயிகள் 221 கிலோ எடையுள்ள 7 கொப்பரை மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். அதனை காங்கயம் மற்றும் வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்த 3 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். இதில் குறைந்தபட்ச விலையாக ரூ.92.00க்கும், அதிகபட்ச விலையாக ரூ.145.00க்கும் கொப்பரை ஏலம் எடுக்கப்பட்டது. 221 கிலோ எடையுள்ள 7 கொப்பரை மூட்டைகள் மொத்தமாக ரூ.31 ஆயிரத்து 846 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. இத்தகவலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் மாரியப்பன் தெரிவித்தார்.

The post ரூ.31 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Tags : Copra ,Kangayam ,Kangayam Agricultural Regulatory Sales Hall ,Dinakaran ,
× RELATED ரயிலில் கேட்பாரற்று கிடந்த 4 கிலோ கஞ்சா பறிமுதல்