×

சைக்கிள் மீது கார் மோதி முதியவர் பலி

 

திருப்பூர், மார்ச் 4: திருப்பூர், இச்சிப்பட்டி, கோம்பைக்காடு பகுதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி (71). இவருக்கு திருமணமாகி மகன்கள் உள்ளன. இந்நிலையில், அந்தோணிசாமி கருக்கம்பாளையம் பகுதியில் சைக்கிளில் சென்றார். அப்போது, எதிரே வந்த கார் அந்தோணிசாமி ஓட்டிச்சென்ற சைக்கிள் மீது மோதியது. இதில், அந்தோணிசாமி தூக்கி வீசப்பட்டார்.  பின்னர், அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

The post சைக்கிள் மீது கார் மோதி முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Anthony Samy ,Kombaikkadu ,Ichipatti, Tiruppur ,Karukampalayam ,
× RELATED ஊட்டி தொகுதியில் போட்டியிட காங். எம்எல்ஏ விருப்ப மனு