×

ஒன்றிய அரசு அடித்த கமிஷன் எவ்வளவு?அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: ஒன்றிய அரசு அடித்த கமிஷன் எவ்வளவு என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலைக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தனது சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது: 2014ம் ஆண்டு 55.87 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் சுமை தற்போது 2025ம் ஆண்டு ரூ.181.74 லட்சம் கோடியாக மாறியிருக்கிறதே, அப்படியென்றால் நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு என்று திருப்பிக் கேட்கலாமா?

தமிழ்நாட்டின் மீது உண்மையில் உங்களுக்கு அக்கறை இருந்தால், உங்கள் கட்சியின் அமைச்சர்களிடம் கேட்டு தமிழ்நாட்டிற்கு நிலுவையில் இருக்கும் கல்வி, நூறு நாள் வேலைத் திட்டம் உள்ளிட்டவற்றிற்கான நிதியை பெற்றுத் தாருங்கள். கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சியை ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை-2025 பாராட்டியிருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் அவதூறை மட்டுமே பரப்புவது உங்களது அரசியல் முதிர்ச்சிக்கான போதாமையையே காட்டுகிறதே தவிர வேறல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post ஒன்றிய அரசு அடித்த கமிஷன் எவ்வளவு?அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Tags : EU government ,Minister ,Thangam Thannarasu ,Annamalai ,Chennai ,Finance Minister ,Thangam Tennarasu ,Tamil Nadu ,Finance Minister Thangam Tennarasu ,
× RELATED யாருமே கண்டு கொள்ளாததால் விரக்தி கோயில் கோயிலாக சுற்றும் ஓபிஎஸ்