×

வரதட்சணை கேட்டு தாக்கியதில் பார்வை இழந்த இளம்பெண்: கணவன் கைது

சென்னை: வரதட்சணை கேட்டு கணவன் தாக்கியதில் இளம்பெண் பார்வை பறிபோன சம்பவம் விருகம்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருகம்பாக்கம் தாங்கல் உள்வாயல் தெருவை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (30).  தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சித்ரா (29). தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. திருமணமான நாள் முதல் லோகேஸ்வரன் கூடுதல் வரதட்சணை கேட்டு தினமும் சித்ராவை அடித்து உதைத்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், கடந்த 25ம் தேதி இரவு போதையில் வீட்டிற்கு வந்த லோகேஸ்வரன், மனைவியிடம் வரதட்சணை கேட்டு மீண்டும் தகராறில் ஈடுபட்டு, கையில் வைத்திருந்த செல்போனால் மனைவி சித்ரா முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார். இதில் சித்ராவின் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் வெளியேறியது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவரது பார்வை பறிபோனது. இதுகுறித்து சித்ரா வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து லோகேஸ்வரனை கைது செய்தனர்….

The post வரதட்சணை கேட்டு தாக்கியதில் பார்வை இழந்த இளம்பெண்: கணவன் கைது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Virukampakkam ,Virugampakkam ,
× RELATED சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி...