×

பயனரின் கருத்தை கேட்காமலே சமூக வலைதள பதிவுகளை ஒன்றிய அரசு நீக்க முடியுமா? பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்கள் ஒன்றிய அரசின் அறிவுறுத்தல் பெயரில் சமூக வலைதள பயனாளர்களுக்கு தெரியாமலே அவர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்படுவதாக கூறி மென்பொருள் சுதந்திர சட்ட மையம் என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கானது நீதிபதிகள் பி.ஆர் கவாய் மற்றும் ஏ.ஜி.மசிஹ் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், ‘‘சமூக வலைதளங்களில் உள்ள தகவல்களை நீக்குவதற்கு ஒன்றிய அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்றாலும், சமூக வலைதளத்தில் தகவல்களை பதிவிட்ட பயனாளரின் கருத்துக்களை கேட்க நோட்டீஸ் அனுப்பாமல் நீக்குவது, இயற்கை நீதியின் கொள்கையை மீறக் கூடியது ஆகும். என்று தெரிவித்தார். இதையடுத்து அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘சமூக வலைதளப் பயனாளர்கள் பதிவு செய்யும் கருத்தை அவர்களை கேட்காமலே சமூக வலைதள கணக்குகளில் இருந்து ஒன்றிய அரசால் நீக்க முடியுமா? என்பது குறித்து பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

The post பயனரின் கருத்தை கேட்காமலே சமூக வலைதள பதிவுகளை ஒன்றிய அரசு நீக்க முடியுமா? பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Supreme Court ,New Delhi ,Software Freedom Law Center ,Dinakaran ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...