- நிர்மலா தேவி
- மதுரை
- ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம்
- அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்
- தின மலர்
மதுரை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவிகளை, தவறாக வழிநடத்திய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவிக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை ரத்து செய்தும், இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என ஐகோர்ட் கிளையில் நிர்மலாதேவி மனு செய்திருந்தார்.இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது எனக்கூறி, வழக்கின் விரிவான விசாரணையை வருகிற 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
The post நிர்மலாதேவி ஜாமீன் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

