×

இலங்கைக்கு கடத்திய ரூ.2.30 கோடி கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் ரோந்து பணியின்போது தமிழக கடல் எல்லையில் இருந்து யாழ்ப்பாணம் கடற்பகுதிக்குள் நுழைந்த ஒரு பைபர் படகை அனலை தீவு அருகே நேற்று அதிகாலை விரட்டிப் பிடித்தனர். படகை சோதனை செய்ததில், மறைத்து வைத்திருந்த 78 பொட்டலங்களில் இருந்து 198 கிலோ கேரளா கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் படகில் இருந்த 2 பேரை கைது செய்தனர். தலைமன்னார் மாவட்டம் மரிச்சுக்கடி கடற்பகுதிக்கு டூவீலரில் கொண்டு சென்ற 14 பார்சல்களில் 32 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதில் வந்த இளைஞரையும், கடற்படையினர் கைது செய்தனர். ரூ.2.30 கோடி மதிப்பிலான 230 கிலோ கஞ்சா சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

The post இலங்கைக்கு கடத்திய ரூ.2.30 கோடி கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : SRI LANKA ,Rameshwaram ,Sri Lankan Marines ,Jaffna Sea ,Tamil Nadu Sea border ,Anala Island ,Dinakaran ,
× RELATED பலமுறை கண்டித்தும் உறவை தொடர்ந்ததால்...