- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஹஜ் அசோசியேஷன்
- முதல் அமைச்சர்
- சென்னை
- ஜனாதிபதி
- இந்திய ஹஜ் சங்கம்
- அபூபக்கர்
- மு.கே ஸ்டாலின்
- தின மலர்
சென்னை: இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தற்போது ஹஜ் இல்லம் கட்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.64 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். சென்னையில் புதிய விமான நிலையத்திற்கும், பழைய விமான நிலையத்திற்கும் நடுவில் புதிய ஹஜ் இல்லம் கட்டப்பட நிலம் தேர்வு செய்யப்பட்டு அதற்காக 64 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதே தாயுள்ளம் கொண்ட முதல்வரின் தயாள குணத்தை எடுத்துக் காட்டுகிறது.
தமிழ்நாட்டு இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, இந்தியா முழுக்க உள்ள 42 கோடி இஸ்லாமியர்களும் சேர்ந்து தமிழக முதல்வருக்கு நன்றி கடன் பெற்று இருக்கிறோம். ஹஜ் இல்லம் கட்டுவதற்கு பல ஆண்டுகளாய் குரல் கொடுத்த அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் அல்லாத அமைப்புகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் முதல் முறையாக ஹஜ் இல்லம் கட்ட ரூ.64 கோடி ஒதுக்கீடு: முதல்வருக்கு ஹஜ் அசோசியேசன் நன்றி appeared first on Dinakaran.
