- தேமுதிக
- பிரேமலதா
- கும்பகோணம்
- விஜயகாந்த்
- சாக்கோட்டை பஞ்சாயத்து
- தஞ்சாவூர் மாவட்டம்
- பொதுச்செயலர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சாக்கோட்டை ஊராட்சியில் விஜயகாந்த் முழு உருவச்சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டெல்டா விவசாயிகள் வாழ்ந்தால் தான் தமிழ்நாடு வாழ்ந்ததாக வரலாறு. அதுபோல அன்னை மொழி காப்போம், அனைத்து மொழியும் கற்போம் என கேப்டன் சொல்லிவிட்டு போனதை நாங்கள் பின்பற்றுகிறோம். நமது தாய்மொழி தமிழ். அது நமது உயிர் போன்றது. ஆனால் அனைத்து மொழியும் கற்கும்போது தான் தமிழ்நாட்டில் இருந்து வேறு மாநிலத்திற்கு செல்லும் போது வேலைவாய்ப்பு கிடைக்கும். பல்வேறு வகையில் எதிர்காலம் சிறக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
தமிழக அரசு சார்பில் தொகுதி மறுவரையறை தொடர்பாக நடத்தப்படும் அனைத்து கட்சி கூட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் நிச்சயமாக இந்த கூட்டத்தில் தேமுதிக சார்பில் பங்கேற்போம். வரும் ஏப்ரல் மாதம் செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு 234 தொகுதிகளிலும் தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவர். வரும் 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நாங்கள் இடம்பெறும் கூட்டணி 234 தொகுதிகளையும் கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்று சரித்திர சாதனை படைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
The post தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தில் தேமுதிக நிச்சயம் பங்கேற்கும்: பிரேமலதா அறிவிப்பு appeared first on Dinakaran.
