சென்னை: என்னிடம் பொண்டாட்டி பொண்டாட்டின்னு பம்முனியே? அதுக்கு எல்லாம் பதில் சொல்லுடா என சீமானுக்கு நடிகை விஜயலட்சுமி பதிலடி கொடுத்துள்ளார். நடிகை விஜயலட்சுமி, சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றி விட்டதாகவும், அவரால் 7 முறை கருக்கலைப்புக்கு ஆளானதாகவும் கடந்த 2011ம் ஆண்டு புகார் அளித்திருந்தார், தொடர்ந்து கடந்த 2023ம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையம் மற்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார்.
பின்னர் தனது புகார் எண் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி விஜயலட்சுமி தனது புகாரை வாபஸ் பெற்றார். விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பாலியல் வன்கொடுமை வழக்கு என்பதால் இதனை ரத்து செய்ய முடியாது என சீமானின் வாழ்க்கை தள்ளுபடி செய்தது. மேலும் 12 வாரத்திற்குள் இந்த வழக்கு விசாரணையை நிறைவு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதையடுத்து இதுதொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இந்த வழக்கு விசாரணை தொடர்பாக சீமான் நேற்று முன் தினம் ஆஜரானார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சீமான் நடிகை விஜயலட்சுமி குறித்து ஆபாசமாக பேசினார். அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினரும் சீமானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சீமான் பேசியதற்கு நடிகை விஜயலட்சுமி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது: சீமான்.! எதுக்காக 2023ல் எனக்கு பணம் போட்ட.? எனக்கு குடும்பம் இருக்கு, குழந்தை இருக்குன்னு சொல்லி சீன் போட்டுக்கிட்டு இருக்கியே? என்கிட்ட இருந்து எதுக்குடா வீடியோ வாங்குனீங்க.? நீ எல்லாத்தையும் பண்ணிட்டு என்ன அசிங்கப்படுத்துற? நான் வாயை பொத்திக்கொண்டு இருக்கணுமா.? உன்னுடைய ஆட்கள் என்னை மிரட்டுவார்களா.? இதுக்கெல்லாம் பயந்து நான் செத்துக் கொண்டே இருக்கணுமா.? அநாகரிகமா பேசாத சீமான். என்னுடன் வெறும் 6 மாசம் தான் பழகினியா.?
2011ல் நீங்கள் செய்த கொடுமைகள் பொறுக்க முடியாமல்தான் போட்டிருந்த உடையுடன் கமிஷனர் ஆபீசுக்கு சென்று புகார் கொடுத்தேன். உன்னை விடவும் கேவலமாக பேச எனக்கும் தெரியும். டிராமா போடாதே. இவ்வளவு நாளா விஜயலட்சுமி யாருன்னு தெரியாது அப்படின்னு தானே சொன்னே? இன்னைக்கு பணம் போட்டேன்னு எதுக்குடா சொன்னே.? என்னிடம் பொண்டாட்டி பொண்டாட்டின்னு பம்முனியே? அதுக்கு எல்லாம் பதில் சொல்லுடா. மீடியா முன்பு சீன் போடாதே. நான் கேவலமான பொம்பளையா.? உன்னை போல ஒரு துப்பு கெட்ட நாயுடன் வாழ்ந்ததற்கு எனக்கு கேவலமாக இருக்கிறது. இவ்வாறு வீடியோவில் கூறியுள்ளார்.
The post என்னிடம் பொண்டாட்டி, பொண்டாட்டின்னு பம்முனியே? அதுக்குலாம் பதில் சொல்லுடா: சீமானுக்கு நடிகை விஜயலட்சுமி பதிலடி appeared first on Dinakaran.
