×

சென்னை ரயிலில் ரூ.77 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது

அரியலூர்: தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் ஈஸ்வர ராவ் உத்தரவின் பேரில் திருச்சி ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை அரியலூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில், பயணி ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர் பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூர் வேலுசாமி மகன் வினோத்குமார்(28) என்பதும், அவரிடம் உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி ரூ.77,11,640 ஹவாலா பணம் இருந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் சென்னையிலிருந்து ரயில் மூலம் அரியலூர் வந்தது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார், திருச்சி வருமான வரித்துறை டிஎஸ்பி சுவேதாவிடம் ஒப்படைத்தனர். மேலும் வினோத்குமாரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை ரயிலில் ரூ.77 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ariyalur ,Southern Railway ,Principal Chief Security Commissioner ,Easwara Rao ,Trichy railway station ,Ariyalur railway station ,Hawala ,
× RELATED 1.5 கிலோ தங்கத்துடன் தப்பிய சிறுவன் கைது