×

2023 அக்டோபர் 1க்கு பின் பிறந்தோர் பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்புச் சான்றிதழ் கட்டாயம்

புதுடெல்லி: பாஸ்போர்ட் பெறுவதற்கான விதிமுறைகள் குறித்து நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ‘‘திருத்தப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம் நடைமுறைக்கு வந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 1க்கு பின் பிறந்த அனைத்து குடிமக்களும் பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது பிறந்த தேதிக்கான சான்றாக தங்களது பிறப்பு சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.

இந்த தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் பாஸ்போர்ட் திருத்த விதிகள் 2025ன்படி பிறப்பு சான்றாக மாற்று ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தால் கடைசியாக படித்த அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் வழங்கப்பட்ட மாற்று சான்றிதழ், பான்கார்டு, அரசு ஊழியர்களாக இருந்தால் சேவைப்பதிவு அல்லது ஓய்வூதிய உத்தரவு, ஓட்டுனர் உரிமம், தேர்தல் அடையாள அட்டை எல்ஐசி அல்லது பொது நிறுவனங்களால் வழங்கப்பட்ட பாலிசி பத்திரம் உள்ளிட்டஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கலாம்” என குறிப்பிட்டுள்ளது.

The post 2023 அக்டோபர் 1க்கு பின் பிறந்தோர் பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Dinakaran ,
× RELATED இமாச்சலில் சிகிச்சைக்கு வந்த...