×

ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம்

 

ஸ்ரீவில்லிபுத்தூர், மார்ச் 1: ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு பேருந்து நிலையம் என பெயர் சூட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நகர்மன்ற துணைத் தலைவர் செல்வமணி, கமிஷனர் பிச்சைமணி, நகராட்சி உதவி பொறியாளர் நாகராஜ், நில அமைப்பு அலுவலர் ஆறுமுகம், சுகாதார அலுவலர் கந்தசாமி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு பேருந்து நிலையம் என பெயர் சூட்ட ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மொத்தம் 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Municipal ,Council ,Srivilliputhur ,Muthamizha Arignar Kalaignar ,Muthamizha ,Arignar ,Stand ,Municipal Council ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை