×

தேனியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

 

தேனி, மார்ச். 1 : தேனி மாவட்ட நீதிமன்றங்களின் முன்பாக தேனி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில், தேனி மாவட்ட நீதிமன்றங்களின் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, வக்கீல்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும், வக்கீல்களுக்கான சேமநலநிதியை ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

 

The post தேனியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Theni ,Theni District Courts ,Theni Lawyers Association ,Santhanakrishnan… ,
× RELATED புழல் சிறைச்சாலையில் வாகனங்கள் ஏலம்