பந்தலூர், மார்ச் 1: பந்தலூர் அருகே சேரம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. பந்தலூர் அருகே சேரம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் 98-வது ஆண்டு விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சுனைர் தலைமை வகித்தார்,தலைமை ஆசிரியர் அஜிதாகுமாரி ஆண்டறிக்கை வாசித்தார். பட்டதாரி ஆசிரியர் சித்ரா வரவேற்று பேசினார்.
சேரம்பாடி எஸ்என் மெடிக்கல் மருத்துவர் நிஷா ஷெரிப் குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்து வாழ்த்தி பேசினார்.
சேரங்கோடு ஊராட்சியின் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார், சேரம்பாடி காவல் நிலைய எஸ்ஐ விக்னேஷ் குமார்,சேரம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு கிருஷ்ணதாஸ், பிதர்காடு அரசு ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் பத்மநாபன், முன்னாள் யூனியன் கவுன்சிலர் பத்மாவதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சாதித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
தொடர்ந்து பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் சந்திரசேகர், சமத்துவ குழு தலைவர் அன்பழகன், மில்டா சேக் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
The post நடுநிலைப்பள்ளி ஆண்டு விழாவில் சாதனை மாணவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.
