×

பாளையில் புனித மிக்கேல் குழுமத்தின் இல்ல விழா

 

நெல்லை, மார்ச் 1: பாளை புனித மிக்கேல் குழுமத்தின் நிர்வாக இயக்குனரும், நெல்லை மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளருமான மிக்கேல் எஸ்.ராஜேஷ் – அன்டோநேசமேரியின் மகள்கள் ஷெரில் கிறிஸ்டியானா, ஷாலின் கார்மெலா ஆகியோரின் முதல் நற்கருணை திருவிருந்து விழா பாளை தூய சவேரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விண்ணரசி அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.

விழாவில் பாளை மறை மாவட்ட ஆயர் அந்தோனிசாமி, தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோனி, முன்னாள் ஆயர்கள் பாளை ஜூடு பால்ராஜ், கோட்டார் பீட்டர் ரெமிஜியஸ், தூத்துக்குடி யுவன் அம்புரோஸ் ஆகியோர் தலைமை வகித்து திருப்பலியை நிறைவேற்றினார். சென்னை புனித தோமையார் பசிலிக்கா அதிபர் வின்சென்ட் சின்னத்துரை, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பசிலிக்கா இருதயராஜ், பாளை புனித சவேரியார் கல்லூரி அதிபர் இஞ்ஞாசிமுத்து, செயலர் புஷ்பராஜ், முதல்வர் காட்வின் ரூபஸ், சவேரியார் பள்ளி தாளாளர் ஆல்பர்ட் ஜோசப், தலைமை ஆசிரியர் ஜோசப்கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் சிஎஸ்ஐ திருமண்டல பேராயர் பர்னபாஸ், பாஸ்டரேட் சேர்மன் ஆல்வின் பிரைட், மிலிட்டரி லைன் பாஸ்டரேட் சேர்மன் மதுரம், தமிழ் மாநில ஜமாத்துல் உலமா தலைவர் காஜாமுஹினூத்தீன் பாகவி, செய்யது குழும தலைவர் பத்ஹூர்ரப்பானி, நாகூர் தர்கா கலியா மஸ்தான், கோளரிநாத ஆதீனம் புத்தாத்மானந்தா சுவாமிகள், சிவபிச்சையா, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின், ராபர்ட் புரூஸ் எம்பி, நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் அமைச்சர் டிபிஎம்.மைதீன்கான், எம்எல்ஏக்கள் ரூபி மனோகரன், ராஜா, நயினார் நாகேந்திரன், கிறிஸ்தவ தேவலாயங்களில் பணிபுரியும் உபதேசியார் மற்றும் பணியாளர்கள் நலவாரிய தலைவர் விஜிலா சத்யானந்த்,

முன்னாள் எம்எல்ஏக்கள் மாலைராஜா, ஏ.எல்.எஸ்.சுப்பிரமணியன், தொகுதி பொறுப்பாளர்கள் பாளை வசந்தம் ஜெயக்குமார், நெல்லை முத்துசெல்வி மற்றும் வெற்றிக்கொண்டான், மதிமுக மாவட்ட செயலாளர் கேஏஎம்.நிஜாம், வணிகர் சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா, மாவட்ட தலைவர் செல்வராஜ், பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், மாநகராட்சி பாளை மண்டல சேர்மன் பிரான்சிஸ், நாங்குநேரி முன்னாள் யூனியன் சேர்மன் சாலமோன்ராஜா, நடுவை நாராயணன், நெல்லை முத்துக்குமார், ராபின் கார்ஸ் ராபின்சன், எஸ்கேஎம் சிவக்குமார், ஜேவிஆர் ஸ்டீபன், மெல்வின் ராஜ், சரத் ஆனந்த், கேஎன்எம் பீரப்பா, குமார் வர்க்கீஸ் ராஜ், மதுரம் ஹரிபிரசாத், பாலு பாண்டியன், மைக்கேல், கல் பட்டறை முருகன், முத்து, வக்கீல் ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பாளையில் புனித மிக்கேல் குழுமத்தின் இல்ல விழா appeared first on Dinakaran.

Tags : St. Michael's Group ,Palai ,Nellai ,Michael S. Rajesh ,Managing Director ,DMK Business Team ,Nellai District ,Antonesa Mary ,Sheryl Christiana ,Shalin Carmela ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை