×

கிருஷ்ணராயபுரம் அருகே காலி குடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்

 

கிருஷ்ணராயபுரம், மார்ச் 1: கிருஷ்ணராயபுரம் அருகே கருப்பத்தூர் ஊராட்சி வேங்காம்பட்டியில் குடிநீர் வழங்கப்படாதே கண்டித்து பொதுமக்கள் காலி குடத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கருப்பத்தூர் ஊராட்சி வேங்காம்பட்டி காலணி பகுதியில் சரியாக குடிநீர் வழங்கப்படாதவை கண்டித்து பொதுமக்கள் காலி குடத்துடன் அவ்வழியாக செல்லக்கூடிய அரசு பஸ்சை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கிருஷ்ணராயபுரம் பிடிஓ முருகேசன், தாசில்தார் பிரபாகர் மற்றும் லாலாபேட்டை போலீசார் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஒரு வார காலத்திற்குள் அப்பகுதியில் போர்வெல் அமைத்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்து தரப்படும் என உறுதி அளித்ததால் போராட்டக்காரர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post கிருஷ்ணராயபுரம் அருகே காலி குடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Krishnarayapuram ,Vengampatti, Karuppattur panchayat ,Karur district ,Vengampatti Colony ,Karuppattur panchayat ,Dinakaran ,
× RELATED தாந்தோணி ஒன்றிய பகுதியில் குடும்ப...