×

முதலமைச்சர் முக.ஸ்டாலின் பிறந்தநாள் இனுங்கூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவர்கள் விதை நேர்த்தி பயிற்சி

 

குளித்தலை, மார்ச் 1: குளித்தலை அடுத்த இனுங்கூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவர்கள் விதை நேர்த்தி பயிற்சி அளித்தனர்.இதில் சாகுபடி செய்வதற்கு முன் விதை நேர்த்தி செய்வது எப்படி? என்ற களப்பணியில் ஈடுபட்டு வரும் திருச்சி மாவட்டம் எம். ஆர். பாளையத்தைச் சேர்ந்த நாளந்தா வேளாண்மைக் கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்கள் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

இந்த பயிற்சியை விவசாயிகளுக்கு கல்லூரி மாணவர்கள் கார்த்திகேயன், கிஷோர்குமார், பிரவீன்கார்த்திக், ராகுல், சந்தோஷ்குமார், சரவணன், சதீஷ், சாம் ராஜ், ஷாங்கேஷ், சொ.சிரஞ்சீவி, சிவா, சுந்தர் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.மேலும் சிறந்த பயிற்சியை மாநில விவசாய மேலாளர் சுரேந்தர் விவசாயிகளுக்கு வழங்கினார்.இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து விவசாயிகள் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post முதலமைச்சர் முக.ஸ்டாலின் பிறந்தநாள் இனுங்கூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவர்கள் விதை நேர்த்தி பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Inungur ,Kulithalai ,Trichy district ,Dinakaran ,
× RELATED தாந்தோணி ஒன்றிய பகுதியில் குடும்ப...