×

பாஜவின் தலித் எதிர்ப்பு மனநிலை: ராகுல்காந்தி கண்டனம்

புதுடெல்லி: பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையத்தில் காலியாக உள்ள முக்கிய பதவிகள் நிரப்பப்படாமல் இருப்பதற்கு பாஜ அரசை மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘பாஜ அரசில் தலித் விரோத மனநிலைக்கு மற்றொரு சான்றை பாருங்கள். தலித்துக்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய பட்டியல் சாதி ஆணையமானது வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளது.

அதில் இருக்கும் இரண்டு முக்கிய பதவிகள் கடந்த ஒரு ஆண்டாக காலியாக உள்ளன. இந்த ஆணையம் ஒரு அரசியலமைப்பு நிறுவனமாகும். இதனை பலவீனப்படுத்துவது தலித்துக்களின் அரசியலமைப்பு மற்றும் சமூக உரிமைகள் மீதான நேரடி தாக்குதலாகும். ஆணையம் இல்லையென்றால் அரசில் தலித்துக்களின் குரலை யார் கேட்பார்கள்? அவர்களின் புகார்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பார்கள்?. பிரதமர் மோடி அவர்களே இந்த ஆணையத்தின் அனைத்து பதவிகளும் விரைவில் நிரப்பப்பட வேண்டும். இதனால் அது தலித்துக்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்கும் பொறுப்பை திறம்பட நிறைவேற்ற முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

The post பாஜவின் தலித் எதிர்ப்பு மனநிலை: ராகுல்காந்தி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Rahul Gandhi ,New Delhi ,Lok Sabha ,BJP government ,National Commission for Scheduled Castes ,BJP government… ,
× RELATED அரியானா பாஜக அரசு உத்தரவு; ‘ஹரிஜன்’,...