×

கூடைப்பந்தாட்ட போட்டி: இந்துஸ்தான் தொழில்நுட்ப பல்கலை சாம்பியன்

சென்னை: சென்னையில் நடந்த 18 கல்லுாரிகள் இடையிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் இந்துஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. உயர் கல்வி நிறுவனங்கள் இடையே நேற்று முன்தினம் நடந்த வர்கீஸ் நினைவு கூடைப்பந்தாட்ட போட்டியில் 18 கல்லுாரிகள் பங்கேற்றன.

இதில் சென்னையை சேர்ந்த இந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழக அணி ஆண்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி வாகை சூடியது. 2வது இடத்தை ஜேப்பியார் பல்கலைக்கழகமும், 3வது இடத்தை கர்நாடகாவை சேர்ந்த பிஇஎஸ் பல்கலைக்கழகமும் பிடித்தன. பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் வேல்ஸ் பல்கலைக்கழகம் முதலிடத்தை பிடித்தது. மெட்ராஸ் பல்கலை 2, இந்துஸ்தான் பல்கலை 3வது இடங்களை பிடித்தன.

* சென்னை வண்டலூரில் உள்ள கிரசன்ட் கல்லூரியில் மாநில அளவிலான பூப்பந்து போட்டி நடைபெற்றது. பெண்கள் கல்லூரிகளுக்கு இடையிலான இந்தப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னையை சேர்ந்த எம் ஓ பி வைணவ கல்லூரி, 35-18, 35-26 என்ற புள்ளிக் கணக்கில் சென்னை எத்திராஜ் கல்லூரியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

The post கூடைப்பந்தாட்ட போட்டி: இந்துஸ்தான் தொழில்நுட்ப பல்கலை சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Basketball Tournament ,Hindustan ,Technological University Champion ,Chennai ,Hindustan Technological University ,Varghese Memorial Basketball Tournament ,Chennai… ,Hindustan Technological University Champion ,Dinakaran ,
× RELATED நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது...