திருவண்ணாமலை பிப். 28: திருவண்ணாமலை அருகே அம்மன் சிலையில் இருந்து தங்கத் தாலியை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை அடுத்த மல்லவாடி திடீர் குப்பம் பகுதியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இளையராஜா என்பவர் பூசாரியாக கடந்த 6 ஆண்டுகளாக பணிபுரிகிறார். இவர் வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு கோயிலை பூட்டி விட்டு சென்றார்.
நேற்று காலை கோயிலை திறந்தபோது கதவின் பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், கோயிலுக்குள் சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்து அரை சவரன் தங்கத் தாலி திருட்டு போனது தெரிய வந்தது. இது தொடர்பாக, மல்லவாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர், திருவண்ணாமலை தாலுகா போலீஸில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தாலியை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
The post திருவண்ணாமலை அருகே கோயில் பூட்டு உடைத்து அம்மன் தாலி திருட்டு appeared first on Dinakaran.
