சங்ககிரி, பிப்.28: சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகாவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அன்பு (30). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது மாற்றுத் திறனாளி சிறுமியிடம், கடந்த 4 வருடங்களாக பேசி பழகி வந்துள்ளார். கடந்த 2024 ஆண்டு டிசம்பர் 15ம்தேதி, சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அன்பு அங்கு சென்று, சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் சிறுமி அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக்கு சென்றபோது 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
அதனையடுத்து சிறுமி மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமிக்கு 18 வயது முடியாததால், சேலம் அரசு மருத்துவமனை அதிகாரிகள், சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயினி, எஸ்எஸ்ஐ ரேவதி ஆகியோர் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக, அன்பு மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
The post மாற்றுத்திறன் சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி appeared first on Dinakaran.
