×

பொன்னமராவதி அருகே மழை பெய்து விவசாயம் செழிக்க சுவாமிகளுக்கு கரக எடுப்பு விழா

பொன்னமராவதி, பிப்.28: பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் பண்ணைக்களம் பிடாரி, தேரையான் காட்டான், பெரிய கருப்பர், சின்னகருப்பர் மற்றும் பரிவார சுவாமிகள் மாசி திருவிழாவை முன்னிட்டு மூன்று நாட்கள் கரக எடுப்பு விழா நடந்தது. பாரம்பரியமாக மழை பெய்து விவசாயம் செழிக்க ஆண்டு தோறும் சுவாமிகளுக்கு கரக எடுப்பு விழா நடத்துவது வழக்கம்.

அதேபோல கடந்த செவ்வாய் கிழமை தொடங்கி கரக எடுப்பு விழாவை முன்னிட்டு ஆலவயல் ஆலங்கண்மாய் பிடாரி கோயிலிருந்து கரகம் எடுத்து சாமியாடி முக்கிய கோயில் வீடுகளுக்கு கரகம் சென்றது. பக்தர்கள் கரகம் எடுத்து வந்த சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலுக்கு சென்று கரகத்துடன் ஊர்பொதுமக்கள் அம்மனை வழிபட்டு சென்றனர். பின்னர் ஆலவயல் பண்ணைக்களத்திற்கு திரும்பிய போது வழிநெடுகிலும் பக்தர்கள் கரக எடுத்து வந்து சுவாமியை வழிபட்டனர். பின்னர் பல்வேறு கோயில் வீடுகளில் வழிபாடு செய்தனர். நேற்று மாலை கோயில் வீட்டின் முன் கரக ஆடி பல்வேறு சுவாமி ஆட்டம் ஆடப்பட்டும், பொதுமக்களுக்கு அருள்வாக்கு சொல்லியும் கரக எடுப்பு விழா மூன்று நாட்கள் நடைபெற்றது.

தொடர்ந்து பிரசாதமாக பக்தர்களுக்கு வாழைப்பழம் சீப், தேங்காய் வழங்கப்பட்டது. இதில் ஆலவயல் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post பொன்னமராவதி அருகே மழை பெய்து விவசாயம் செழிக்க சுவாமிகளுக்கு கரக எடுப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Ponnamarawati ,Swamians ,Karaka Picking Ceremony ,Bidari ,Teraiaan Katan ,Valiya Karupar ,Sinnagarapar ,Parivara Swamikal Masi festival ,Alveal Ranch ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை