×

பராமரிப்பு பணி காரணமாக ஜெயங்கொண்டம் பகுதியில் நாளை மின்தடை

ஜெயங்கொண்டம், பிப்.28: ஜெயங்கொண்டம் பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜெயங்கொண்டம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது. கடலங்குடி- நெய்வேலி உயர் அழுத்த மின்பாதை மற்றும் மின் கோபுரங்களின் தகவல் தொடர்பு கேபிள் படம் நீட்டிப்பு பணி செய்ய இருப்பதால் நாளை 1ம் தேதி காலை 9 மணி முதல் பணி முடியும் வரை (தோராயமாக 5 மணி நேரம்) ஜெயங்கொண்டம் துணைமின் நிலையம், தா. பழுர் துணைமின் நிலையம் மற்றும் தழுதாழைமேடு துணைமின் நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களிலில் மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, குருவாலப்பர்கோயில், பிச்சனூர், வாரியங்காவல், தேவனூர், இலையூர், புதுக்குடி, செங்குந்தபுரம், தா.பழூர், சிலால், வாணந்திரையன்பட்டினம், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, தென்கச்சிபெருமாள்நத்தம், நாயகனைபிரியாள், பொற்பொதிந்தநல்லூர், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, வேம்புகுடி, தென்னவநல்லூர், இடைக்கட்டு, வடக்கு/தெற்கு ஆயுதகளம், தழுதாழைமேடு, வீரசோழபுரம், மெய்க்காவல்புத்தூர் மற்றும் துணைமின் நிலையங்களின் அருகில் உள்ள கிராம பகுதிகளில் வரும் 1ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் பணி முடியும் வரை(தோராயமாக 5 மணி நேரம்) மின் வினியோகம் இருக்காது என செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முதல்வர் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

The post பராமரிப்பு பணி காரணமாக ஜெயங்கொண்டம் பகுதியில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Tags : Jayankondam ,Electricity Board ,Jayankondam Electricity Board ,Assistant Executive Engineer ,Silambarasan ,Kadalangudi-Neyveli ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை