×

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் ₹1.30 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்

கூடங்குளம், பிப்.28: ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் ₹1.30 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைத்தார்.

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி வள்ளியூர் யூனியனுக்குட்பட்ட பழவூர் நாறும்பூநாதசுவாமி கோயிலில் ₹10.50 லட்சத்தில் உலோக திருமேனி பாதுகாப்பு பெட்டகம் அமைக்கும் பணியினை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். தொடர்ந்து பழவூரில் மாவட்ட ஊராட்சி நிதி ₹9.50 லட்சத்தில் புதிய பேவர்பிளாக் சாலை, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் யாக்கோபுரத்தில் ₹9 லட்சத்தில் புதிய நூலகம், மாறன்குளத்தில் ₹ 8 லட்சத்தில் புதிய ரேஷன்கடை கட்டிடம், ரங்க நாராயணபுரத்தில் ₹9 லட்சத்தில் புதிய நூலகம் கட்டுமான பணி, மதகநேரியில் ₹15 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம், மதகநேரி அரசு உயர்நிலைப்பள்ளி சாலையில் மாவட்ட ஊராட்சி நிதி மூலம் ₹23 லட்சத்தில் பேவர்பிளாக் சாலைகளுக்கு சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார்.

பழவூர் கிழக்கு தெரு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ₹13 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன்கடை, மாவட்ட ஊராட்சி நிதி மூலம் ஆவரைகுளம் ஊராட்சி செம்பிகுளத்தில் ₹6 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை, இருக்கன்துறை ஊராட்சி கீழ்குளத்தில் ₹7 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பல்நோக்கு கட்டிடம், புத்தேரி கிராமத்தில் ₹5 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை, தெற்கு கருங்குளம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் ₹15 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும் அப்பாவு திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், வள்ளியூர் பிடிஓக்கள் மனோகர், பொன்ராஜ், பஞ்சாயத்து தலைவர்கள் பழவூர் சுப்புலெட்சுமி குமார், இருக்கன்துறை இந்திரா முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் ₹1.30 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் appeared first on Dinakaran.

Tags : Radhapuram assembly ,Kudankulam ,Speaker ,Appavu ,Palavur Narumpunathaswamy ,Valliyur ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி