×

தட்டச்சு பணியாளரை அடித்த விவகாரம்: 4 அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம்

கிருஷ்ணராயபுரம், பிப்.28: கிருஷ்ணராயபுரம் ஊரா ட்சி ஒன்றிய அலுவலகத்தில் தட்டச்சு பணியாளரை (டைப்பிஸ்ட்) கன்னத்தில் அடித்த விவகாரம் தொடர்பாக 4 அரசு அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம், காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்(24), டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பெற்ற தேர்வு செய்யப்பட்டு கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த ஓராண்டிற்கு மேலாக தட்டச்சு பணியாளராக (டைப்பிஸ்ட்) பணியாற்றி வந்தார். இதே அலுவலகத்தில் மேலாளராக (ஊராட்சிகள்) பணியாற்றிய அன்புமணி கடந்த வாரம் சனிக்கிழமை அன்று தட்டச்சு பணியாளர் சரவணனை கன்னத்தில் அடித்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் நடத்தினர். மாவட்ட நிர்வாகம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் போராட்டம் முடிவுக்கு வந்தது.இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) தேன்மொழி, க.பரமத்தி ஒன்றிய அலுவலகத்திற்கும், மேலாளர் (ஊராட்சிகள்) அன்புமணி, அரவக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்திற்கும், மேலாளர் (நிர்வாகம்) நாகராஜன் கடவூர் ஒன்றிய அலுவலகத்திற்கும், தட்டச்சர் சரவணன் கரூர் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திற்கும் பணியிடம் மாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக ஒன்றிய வட்டார அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தட்டச்சு பணியாளரை அடித்த விவகாரம்: 4 அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Krishnarayapuram ,Krishnarayapuram Village Council ,Saravanan ,Gandhigramam ,Karur district ,TNPSC… ,Dinakaran ,
× RELATED தாந்தோணி ஒன்றிய பகுதியில் குடும்ப...