×

கிராம உதவியாளர் மீது தாக்குதல்

 

தொண்டி,பிப்.28: தொண்டி அருகே ஆழிகுடி கிராம உதவியாளராக சுதாகர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று கிழக்கு கடற்கரை சாலை வீரசங்கிலி மடம் பகுதியில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மூன்று பேர் வழிமறித்து கம்பால் தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சுதாகர், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் அடிப்படையில் சின்னத் தொண்டியை சேர்ந்த நல்லசிவம், முத்து, பொன்னையா ஆகியோர் மீது தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

The post கிராம உதவியாளர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : on the village ,Thondi ,Sudhakar ,Alizhudi ,Duweiler ,East Coast Road Weerasangli Monastery ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை