×

உடுமலையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

 

உடுமலை, பிப். 28: வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற கோரியும், வழக்கறிஞர் சேம நல நிதியை உயர்த்தக் கோரியும், உடுமலை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக நீதிமன்ற பணியில் இருந்து விலகி உடுமலை நீதிமன்ற நுழைவாயில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மூத்த வழக்கறிஞர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.
இதில் வழக்கறிஞர் சங்க செயலாளர் செந்தில் குமார், துணைத்தலைவர் சிவராமன் உள்ளிட்ட பெரும்பாலான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

The post உடுமலையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Udumalai Lawyers Association ,Udumalai Court… ,Dinakaran ,
× RELATED ரயிலில் கேட்பாரற்று கிடந்த 4 கிலோ கஞ்சா பறிமுதல்